ரூ.87½ லட்சத்தில் 12 குப்பை சேகரிக்கும் வாகனங்கள்

திருவாரூர் நகராட்சியில் ரூ.87½ லட்சத்தில் 12 குப்பை சேகரிக்கும் வாகனங்களை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-23 18:45 GMT

திருவாரூர் நகராட்சியில் சுகாதார துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திடக் கழிவு மேலாண்மை திட்டத்திற்காக குப்பைகள் சேகரிக்கும் வாகனம் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன் படி 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 12 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வாங்கப்பட்டு அதனை செயல்பாட்டுக்கு விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் புவனப்பிரியா செந்தில் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர், ஆணையர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் புதிய வாகனங்களை பூண்டி. கே. கலைவாணன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்