12 பரோட்டா சாப்பிட்டால் பணம் தரவேண்டாம்
12 பரோட்டா சாப்பிட்டால் பணம் தரவேண்டாம் என ஓட்டலில் நூதன போட்டி நடத்தப்பட்டது.
காரைக்குடி,
காரைக்குடி செக்காலை சாலை அருகே ஒரு ஓட்டலில் நூதன முறையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் ஒரு நபர் 12 பரோட்டாக்களை சாப்பிட்டு விட்டால் சாப்பிட்டதற்கான பில்லுக்கு பணம் செலுத்த தேவையில்லை. தவறும் பட்சத்தில் சாப்பிட பரோட்டாக்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என்று அறிவித்து உள்ளனர்.இதனை அறிந்த சாப்பாட்டு பிரியர்கள் பலர் அந்த உணவகத்திற்கு வந்து பரோட்டா சாப்பிடும் போட்டியில் பங்கெடுத்தனர். இதுவரை 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். சிலர் 12 பரோட்டாக்களை சாப்பிட முடியாமல் சாப்பிட்ட பரோட்டாக்களுக்கு மட்டும் பணம் செலுத்திவிட்டு செல்கின்றனர். வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் நடிகர் சூரி 50 பரோட்டா சாப்பிட்டு வெற்றி பெறுவார். அதை நினைவூட்டுவதாக இந்நிகழ்வு உள்ளது.