ரூ.12 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணிகள்

வேலூர் உட்கோட்டத்தில் ரூ.12 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணிகளை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தாா்.

Update: 2023-02-09 16:50 GMT

வேலூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் வேலூர், காட்பாடி, குடியாத்தம் என்று 3 உட்கோட்டங்கள் உள்ளன. இந்த உட்கோட்டங்களில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வேலூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட அப்துல்லாபுரம்- அணைக்கட்டு சாலை, பள்ளிடையம்பட்டு-நாயக்கனேரி சாலை, பள்ளிக்குப்பம் சாலைகள் ரூ.12 கோடியில் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் ஞானவேல் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதற்கட்டமாக அவர் அப்துல்லாபுரத்தில் இருந்து அணைக்கட்டு செல்லும் சாலையை ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சாலையின் அளவு மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் அளவையும், சாலை தரமாக போடப்பட்டுள்ளதா என்றும் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் மற்ற 2 சாலைகளையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது வேலூர் உதவி கோட்ட பொறியாளர்கள் பிரகாஷ், ரவிச்சந்திரன் (தரக்கட்டுப்பாடு), உதவி பொறியாளர்கள் விஜயா, அஜித்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்