தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற 12 பா.ஜனதாவினர் கைது

தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற 12 பா.ஜனதாவினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-06 19:45 GMT

களியக்காவிளை, 

தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற 12 பா.ஜனதாவினர் கைது செய்யப்பட்டனர்.

கைது

களியக்காவிளை அருகே உள்ள இடைக்கோடு பேரூராட்சி அலுவலகம் அருகே இலவு மரம் உள்ளது. அதை வெட்டி அகற்ற அதிகாரி அனுமதி வழங்கியிருந்தார். அந்த மரத்தை வெட்டி அகற்றக்கூடாது என்று பா.ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர்.

இந்த நிலையில் போலீசாரின் தடையை மீறி பேரூராட்சி அலுவலகம் முன் மேல்புறம் தெற்கு ஒன்றிய தலைவர் சேகர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த பா.ஜனதா கட்சியினர் முயன்றனர். உடனே போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஒன்றிய பொது செயலாளர் விஜயகுமார், திக்குறிச்சி சுகுமாரன் உள்பட 12 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்