பிறந்தநாள் கொண்டாடிய 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

லால்குடி அருகே பிறந்தநாள் கொண்டாடிய 11-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-12 20:01 GMT

லால்குடி அருகே பிறந்தநாள் கொண்டாடிய 11-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

11-ம் வகுப்பு மாணவர்

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த திருமண மேடு புது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் வீரகணேஷ் (வயது 17). இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் வீரகணேஷின் பிறந்த நாள் ஆகும். இதற்காக அவருக்கு பெற்றோர் ரூ.4 ஆயிரம் கொடுத்துள்ளனர். மாணவர் வீரகணேஷ் புத்தாடை வாங்கி நேற்று முன்தினம் வீட்டில் கேக் வெட்டி குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று காலையில் அவரது அறை கதவு நீண்டநேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீரகணேஷ் தூக்கில் பிணமாக தொங்கினார். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாளுக்கு மறுநாள் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்