11-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

செங்கம் அருகே 11-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2022-12-11 12:56 GMT

செங்கம் அருகே 11-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கல்வெட்டு

செங்கம் அருகே பாச்சல் கிராமம் கண்ணக்குருக்கை ஊருக்கு செல்லும் சாலையில் வேப்ப மரத்தடியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக தொல்லியல் ஆர்வலர்கள் பிரேம் ஆனந்த் மற்றும் குழுவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் நேரில் சென்று அந்த கல்வெட்டினை ஆய்வு செய்தனர். அப்போது அக்கல்வெட்டு சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கிய கல்வெட்டு என்றும், வீர ராஜேந்திரன் சோழன் காலத்தைச் சேர்ந்த 11-ம் நூற்றாண்டு கல்வெட்டு என்றும் உறுதியானது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

சிவாலயம்

இந்த கல்வெட்டின் மூலம் 11-ம் நூற்றாண்டில் வீர ராஜேந்திர சோழன் காலத்தில் வாலீஸ்வரர் உடையார் என்ற கோவிலுக்கு தானமாக நிலத்தை வழங்கி உள்ளதை அறிய முடிகிறது.

இக்கல்வெட்டில் குறிப்பிட்டு உள்ள வாலீஸ்வரர் உடையார் என்பது பாய்ச்சல் மற்றும் கண்ணக்குறுக்கை கிராமங்களில் அழிந்து போன சிவாலயமாக இருக்கலாம்.

தொல்லியல் துறையினர் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டால் இக்கோவிலை பற்றி மேலும் பல ஆச்சரியமான வரலாற்று தகவல்களை அறிய முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்