அண்ணா பிறந்தநாள்: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

சென்னை அண்ணாசாலையில் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் புகைப்படத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2022-09-15 06:25 GMT

சென்னை,

மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இநத நிலையில், சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அண்ணா புகைப்படத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அவருடன் கட்சி உறுப்பினர்களும், தொண்டர்களும், அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 

Tags:    

மேலும் செய்திகள்