தமிழகத்தில் 113 ஆண்டுகளில் இல்லாத மழை பொழிவு.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, தென்மேற்கு பருவமழை 40 சென்டிமீட்டர் வரை பதிவாகியுள்ளது.
சென்னை,
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் இயல்பை விட 93 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, தென்மேற்கு பருவமழை 40 சென்டிமீட்டர் வரை பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 88 சதவீதம் அதிகம் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இது வரை அதிகளவில் 1906 ஆம் ஆண்டில் 112 சென்டிமீட்டர் மழையும், 1909ம் ஆண்டு 127 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டில் 93 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுவே கடந்த 113 ஆண்டுகளில் பதிவாகியுள்ள அதிகளவிலான மழை என்பது குறிப்பிடத்தக்கது.