குரூப்-4 தேர்வை 11 ஆயிரத்து 30 பேர் எழுதினர்

பொள்ளாச்சியில் குரூப்-4 தேர்வை 11 ஆயிரத்து 30 பேர் எழுதினர்.

Update: 2022-07-24 14:19 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் குரூப்-4 தேர்வை 11 ஆயிரத்து 30 பேர் எழுதினர்.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வு எழுத பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் 13 ஆயிரத்து 643 பேர் விண்ணப்பித்தனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக 23 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த தேர்வு பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய இடங்களில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. தேர்வர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர். நுழைவு சீட்டு சரிபார்த்த பின்னர் தேர்வறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

2,613 பேர் வரவில்லை

தேர்வர்கள் அனைவரும் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்ய கருப்பு நிறம் கொண்ட பந்துமுனை பேனாவை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். பென்சில் மற்றும் ஏனைய நிற பேனாக்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் செல்போன், ஸ்மார்ட் கைக்கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதன பொருட்களையும் கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

தேர்வு 12.30 மணிக்கு முடிந்த நிலையில் தேர்வர்கள் தங்களது விடைத்தாளை சரிபார்த்து கொள்ள 15 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தேர்வர்கள் தங்களது விடைத்தாளை 12.45 மணிக்கு அறை கண்காணிப்பாளர்களிடம் வழங்கினர்.

பொள்ளாச்சியில் இந்த தேர்வை 11 ஆயிரத்து 030 பேர் எழுதினர். 2 ஆயிரத்து 613 தேர்வு எழுத வரவில்லை. தேர்வை முன்னிட்டு அந்தந்த மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்