தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் 11 பேர் தமிழக நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் 11 பேர் தமிழக நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-09-03 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 11 பள்ளி ஆசிரியர்கள், தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

நல்லாசிரியர் விருது

தமிழக அரசு ஆண்டு தோறும் சிறப்பாக பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி தொடக்க கல்வியில், உடன்குடி அருகே உள்ள சிறுநாடார் குடியிருப்பு ரா.ம.வீ.நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பி.பர்வதா தேவி, வாகைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர் ஜோ.ஸ்டாலின், ஆழ்வார்திருநகரி கீழக்கல்லாம்பாறை ஊராட்சி ஒன்றிய தொக்கப்பள்ளி ஆசிரியர் ரா.ராஜாத்தி கிரசன்சியா, கயத்தார் தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மோ.ராஜையா, ஸ்ரீவைகுண்டம் அகரம் டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இரா.சசிலதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளி

மெட்ரிக் பள்ளியில், தூத்துக்குடி டி.எம்.என்.எஸ்.டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் செ.பா.மாரியம்மாள், மேல்நிலைப்பள்ளியில், கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சு.கஜேந்திரபாபு, காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பீ.அ.சேக் பீர் முகம்மது காமீல், கோவில்பட்டி வ.உ.சி.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தா.சுரேஷ்குமார், நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயசீலன் சேகர் டேவிட், தூத்துக்குடி விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெ.ஸ்டெல்லா பரிபூரணம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்