கூடுதல் விலைக்கு மது விற்ற 11 பேர் பணியிடை நீக்கம்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற பணியாளர்கள் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டார்.

Update: 2023-09-10 22:52 GMT


டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற பணியாளர்கள் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டார்.

பணியிடை நீக்கம்

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் விசாகன் கடந்த 3 நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சில கடைகளில் மதுபாட்டில்கள் ரூ. 10 கூடுதலாகவும், சில கடைகளில் மதுபாட்டில் கூடுதலாகவும் விற்பனை செய்வதை கண்டறிந்தார். மேலும் சிறப்புக்குழு அமைத்து மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். ஆய்வு மேற்கொண்ட 15 கடைகளில் அதிக விலைக்கு மதுபான பாட்டில்கள் விற்பனை செய்ததாக பணியாளர்கள் முத்துமாரியப்பன், தென்னரசு, முத்துக்குமார் உள்பட 11 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அபராதம்

மேலும் மதுபாட்டில்களை ரூ.5 கூடுதல் விலைக்கு விற்ற 9 பணியாளர்களிடம் இருந்து ரூ.53,100 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என மேலாண்மை இயக்குனர் விசாகன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்