விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 11 பேர் கைது

கடலூரில் போராட்டத்துக்கு புறப்பட்ட விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-17 20:15 GMT

கடலூரில் போராட்டத்துக்கு புறப்பட்ட விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோரிக்கை மனு

கடலூர் மாவட்டம் விருதாசலம், சித்தூர் ஆகிய ஊர்களில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைகளில் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து 6 வருடங்களாக கரும்பு பெற்று கொண்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை தராமல் நிலுவையில் வைத்துள்ளதாகவும், இது குறித்து கடலூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் கூறி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் நேற்று காலை கடலூருக்கு புறப்பட தயாராகினர். இது பற்றி ஏற்கனவே தகவல் அறிந்து அங்கு போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் திருச்சி-கரூர் பைபாஸ்ரோடு அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டில் அதிகாலை 5 மணிக்கு குவிந்தனர். அங்கு அய்யாக்கண்ணுவை கடலூருக்கு செல்ல அனுமதி மறுத்தனர்.

11 பேர் கைது

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறிய அய்யாக்கண்ணு, மேகராஜன் உள்பட 11 பேரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதைதொடர்ந்து மாலை 5 மணிக்கு போலீசார் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளை விடுவித்தனர். இதையடுத்து அவர்கள் மண்டபத்தில் இருந்து வெளியே செல்லாமல் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் இரவு 8.30 மணி வெளியே சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்