மதுவிற்ற 11 பேர் கைது; 83 பாட்டில்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக மதுவிற்ற 11 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 83 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-27 19:10 GMT

மதுவிற்பனை

கரூர் மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10 மணி வரை கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசாரும், அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசாரும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுபானங்களை பதுக்கி வைத்து சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கரூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

11 பேர் கைது

இதில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மது விற்ற புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த ஆனந்த்(வயது 25), குளித்தலையை சேர்ந்த பிச்சையம்மாள்(65), பில்லாபாளையத்தை சேர்ந்த சரவணன்(43), மண்மங்கலத்தை சேர்ந்த ரவி(56), இராமநாதபுரத்தை சேர்ந்த பிரேம்குமார்(25), சின்னதாராபுரத்தை சேர்ந்த தண்டபாணி(53), கருப்பாத்தாள்(48), நஞ்சகாளிகுறிச்சியை சேர்ந்த பழனியம்மாள்(62), குளித்தலையை சேர்ந்த துளசி(49), பள்ளபாளையத்தை சேர்ந்த வசந்தா(37), நெய்தலூரை சேர்ந்த முருகன்(49) உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 83 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்