சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் காயம்

சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-10-16 22:06 GMT

கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர்(வயது 55). இவரும், இவரது குடும்பத்தினரும் தென் மாவட்டங்களில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா செல்ல கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு வேனில் புறப்பட்டு வந்தனர். அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவிட்டு நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் வடலூருக்கு திருச்சி வழியாக சென்றனர். வேனை டிரைவர் சிவகுமார்(29) ஓட்டினார்.

அந்த வேன் நேற்று நள்ளிரவில் திருச்சி பஞ்சப்பூர் அருகே வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அந்த வேன் மீது மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாய்ந்த வேகத்தில் இழுத்து செல்லப்பட்டு, அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த டிரைவர் சிவகுமார் மற்றும் 5 பெண்கள், 6 ஆண்கள் உள்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்