ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் ரூ.11 லட்சத்து 61 ஆயிரம் உண்டியல் காணிக்கை

ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் பக்தர்கள் ரூ.11 லட்சத்து 61 ஆயிரம் உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளனர்.

Update: 2023-09-15 18:34 GMT

சேத்துப்பட்டு

ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் பக்தர்கள் ரூ.11 லட்சத்து 61 ஆயிரம் உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளனர்.

சேத்துப்பட்டு தாலுகா ஆவணியாபுரம் கிராமம் சிம்மம் மலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை இந்த கோவிலை நிர்வகித்து வருகிறது. கோவிலில் பக்தர்கள் 7 உண்டியல்களில் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் நிர்வாக செயல் அலுவலர் சரண்யா, அறநிலையத்துறை ஆய்வாளர்கள் நடராஜன் (போளூர்), அன்பழகன் (வந்தவாசி) மற்றும் கோவில் ஊழியர்கள் உட்பட பக்தர்கள் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது,

இதில் ரொக்கமாக ரூ.11 லட்சத்து 61 ஆயிரத்து 852-ம், 101 கிராம் தங்கமும் மற்றும் வெள்ளி இருந்ததாக செயல் அலுவலர் சரண்யா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்