கார்-சரக்கு ஆட்டோ மோதிக்கொண்டதில் 11 பேர் படுகாயம்

திருவிடைமருதூர் அருகே கார்-சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்

Update: 2022-09-12 20:33 GMT

கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் மேலானமேடு வள்ளுவர் தெருவை சேர்ந்த கனகசபை மகன் ரமேஷ் (வயது 37). இவரது மனைவி சுபத்ரா (37). இவர்களது மகள் அனுஷ் கீர்த்தி (4). இவர்கள் 3 பேரும் தங்களது காரில் மயிலாடுதுறையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு அங்கிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு பொருட்கள் வாங்குவதற்காக திருவிடைமருதூர் நோக்கி சரக்கு ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. இதில், திருவிசைநல்லூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21), கார்த்தி (30), முத்து (30), ராஜேஷ்(18), ரமேஷ் மனைவி சித்ரா (32), தீனதயாளன் (31), கணேஷ்குமார் (36), முத்துக்குமார் (29) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். கல்யாணபுரம் அருகே இரு வாகனங்களும் வந்த போது இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இரு வாகனங்களில் வந்த 11 பேரும் படுகாயம் அடைந்தனர். காரில் வந்த ரமேஷ், சுபத்ரா, அனுஷ்கீர்த்தி ஆகிய 3 பேரும் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மற்ற 8 பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்