11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் - உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்பு
தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை,
தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அமைச்சர்கள், சேகர்பாபு, மதி வேந்தன், உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், கா.ராமச்சந்திரன், பழனிவேல் தியாகராஜன், முத்துசாமி, மெய்யநாதன் ஆகியோர் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம், கூடுதல் துறை ஒதுக்கீடு முழுவிவரம்:-