10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

சிவகாசி அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்டார்.

Update: 2022-06-11 19:14 GMT

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் கனகலட்சுமி (வயது 15). 10-ம் வகுப்பு மாணவி. இந்த நிலையில் விடுமுறையில் வீட்டில் இருந்த கனகலட்சுமியிடம், அவரது தாய் மாரியம்மாள் வீட்டு வேலைகளை செய்ய கூறி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மாணவி கனகலட்சுமி அருகில் உள்ள தங்களது ஓட்டுவீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த முருகேசன், சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்