10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

செல்போன் பயன்படுத்தியை தாயார் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-20 20:15 GMT

ஆத்தூர்:-

செல்போன் பயன்படுத்தியை தாயார் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

ஆத்தூர் அருகே நடந்த இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

10-ம் வகுப்பு மாணவி

ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். லாரி பட்டறை மெக்கானிக்கான இவர் கர்நாடக மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பரிமளா கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுடைய மகள் ஹரிணி ஸ்ரீ (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் கடந்த 10-ந் தேதி செல்போனில் கேம் விளையாடி கொண்டு அதை அதிகமாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த மாணவியின் தாயார் பரிமளா, எப்போதும் செல்போனில் விளையாடிக்கொண்டு இருக்கிறாயே என்று மகளை கண்டித்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் கோபமடைந்த ஹரிணி ஸ்ரீ, வீட்டில் தனி அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை குடுமபத்தினர் மீட்டு ஆத்தூர் அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவி ஹரிணி ஸ்ரீ சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்