வனப்பேச்சி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

திருவேங்கடம் வனப்பேச்சி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-04-15 18:45 GMT

திருவேங்கடம்:

திருவேங்கடம் சேவகபெருமாள் அய்யனார் மற்றும் வனப்பேச்சி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வனப்பேச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழஙகப்பட்டது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜைகள், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை இந்திரா நகர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்