108 பட்டுப்புடவை சாற்றும் வைபவம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் விடிய, விடிய 108 பட்டுப்புடவை சாற்றும் வைபவம் நடந்தது.

Update: 2022-12-05 19:03 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் விடிய, விடிய 108 பட்டுப்புடவை சாற்றும் வைபவம் நடந்தது.

ஆண்டாள் கோவில்

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கவுசிக ஏகாதசியை முன்னிட்டும், குளிர் காலம் தொடங்குவதை முன்னிட்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சன்னதியில் கோபால விலாச மண்டபத்தில் ஆண்டாள், ெரங்க மன்னார், கருடாழ்வார். பெரிய பெருமாள், ஸ்ரீதேவி-பூமாதேவிக்கு 108 பட்டுப்புடவைகளை சாற்றும் வைபவம் ேநற்று முன்தினம் இரவில் தொடங்கியது. இதற்காக ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள், ரெங்க மன்னார், கருடாழ்வார் எழுந்தருளி, பெரிய பெருமாள் சன்னதியில் உள்ள கோபால விலாச மண்டபம் வந்தடைந்தனர்.

அதேபோல் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியும் அங்கு வீற்றிருந்தனர்.

விடிய, விடிய நடந்தது

இதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து 108 பட்டு புடவை சாற்றும் நிகழ்ச்சி விடிய, விடிய நேற்று காலை வரை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்