பழமையான வீரபாண்டீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

பழமையான வீரபாண்டீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.

Update: 2022-11-28 18:44 GMT

வெள்ளியணை அருகே மூக்கணாங்குறிச்சி கிராமம் நத்தமேட்டில் பழமையான வீரபாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமாவார நாளில் சிறப்பு அபிஷேகத்துடன் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று 108 சங்கு அபிஷேகத்துடன் பூஜை நடைபெற்றது. இந்த சங்கு பூஜையை முன்னிட்டு 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி வண்ண மலர்களை அதன்மேல் வைத்து, அதன் அருகில் அக்கினி குண்டம் வளர்த்து அதில் பல்வேறு மூலிகைவேர்கள், இலைகள் உட்பட பல்வேறு பொருட்களை இட்டு வேத மந்திரங்களை ஓதப்பட்டது. பின்னர் வீரபாண்டீஸ்வரருக்கு சங்கில் இருந்த புனித நீர், இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வீரபாண்டீஸ்வரருக்கு மலர் மாலைகளை சூட்டி சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்