குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பங்குனி மாதகடைசி வெள்ளிகிழமையை முன்னிட்டு 108 மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டு, காலசந்தி பூஜை, உச்சிகால பூஜை, சாயரட்சை பூஜை நடைபெற்றறு. இரவில் 108 மாவிளக்கு பூஜையும், மூலஸ்தான தீபாராதனையும் நடந்தது. இதில் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பெண்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.