முத்தாரம்மன் கோவிலில் 108 மாவிளக்கு பூஜை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 108 மாவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-07-15 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலசந்தி பூஜை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு 108 மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்