சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2022-06-14 14:21 GMT

சமயபுரம், ஜூன்.15-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. அதன்படி சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் இந்த பூஜை நடைபெற்றது. பூஜையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சமயபுரம் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கல்யாணி, மேலாளர் பரமானந்தம், உள்துறை கண்காணிப்பாளர் அழகர்சாமி, அலுவலக பணியாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு 22 வகை பொருட்கள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறும் என்றும், அதில் கலந்து கொள்ளும் பெண்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.மேலும், ஆதார் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று பணம் செலுத்தும் போது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மேற்கண்ட பொருட்கள் விளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பூஜையில் புதிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்