மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 108 கிலோ குட்கா பறிமுதல்

மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 108 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் ஒருவரை கைது செய்தனர்.

Update: 2022-09-30 20:04 GMT

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 108 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் ஒருவரை கைது செய்தனர்.

தீவிர சோதனை

மார்த்தாண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவற்றை தடுப்பதற்காக போலீசார் தீவிரமாக கண்காணித்து பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலையில் மார்த்தாண்டம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

108 கிலோ பறிமுதல்

அப்போது, மார்த்தாண்டத்தில் வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது. இதனால், சந்தேகமடைந்த ேபாலீசார் அந்த மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அதில் இருந்த மூடையில் குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 108 கிலோ இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 108 கிலோ குட்கா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக மோட்டார் சைக்கிளில் குட்காவை கடத்தி வந்த படந்தாலுமூடு பரமன்விளையை சேர்ந்த சுரேஷ் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்