108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு 'குவா குவா'

வேலூரில் 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

Update: 2023-03-22 17:20 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி தேவேந்திரன் (வயது 32). அவரது மனைவி கோமதி (28). நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் சிவா மற்றும் டிரைவர் ஏ.சிவா ஆகியோர் விரைந்து சென்று கோமதியை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பாகாயத்தை அடுத்த துத்திபட்டு அருகே சென்றபோது பிரசவ வலி அதிகமானதால் ஆம்பிலன்சை நிறுத்தி மருத்துவ உதவியாளர் நுட்புணர் நா.சிவா பிரசவம் பார்த்ததார். அப்போது கோமதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும் சேயும் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்