108 நாள் தொடர் அங்கப்பிரதட்சணம்: ஓம சந்ரு சுவாமி தொடங்கினார்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமிகோவிலில் 108 நாள் தொடர் அங்கப்பிரதட்சணத்தை புதன்கிழமை ஓம சந்ரு சுவாமி தொடங்கினார்ய

Update: 2022-12-14 18:45 GMT

திருச்செந்தூர்:

கடலூர் மாவட்டம் ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை சக்தி பீடம் நிறுவனர் ஓம் சந்ரு சுவாமி நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். அவர், காசியில் தமிழ் சங்கம் அமைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் திருப்பணி ெசய்ய உத்தரவிட்டதற்காகவும், ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு பக்தர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பெருந்திட்ட வளாக பணிகளுக்கு ரூ.200 கோடி நன்கொடை வழங்கிய சிவ் நாடாருக்கும் நன்றி தெரிவித்து நேற்று கோவில் கிரி பிரகாரத்தில் அங்கபிரதட்சணத்தை தொடங்கினார். அவர் தொடர்ந்து 108 நாட்கள் அங்க பிரதட்சணம் செய்ய உள்ளார். முன்னதாக அவரது அங்கபிரதட்சணத்தை திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் மலர் தூவி தொடங்கி வைத்தார். அவர் கோவில் கிரி பிரகாரம் முழுவதும் அங்கபிரதட்சணம் செய்து சாமி தரிசனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்