108 ஆம்புலன்ஸ் வேலைக்கு நேர்காணல்

வேலூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வேலைக்கு நேர்காணல் நடந்தது.

Update: 2022-07-02 16:29 GMT

108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் டிரைவர் பணிக்கான நேர்காணல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்தது. 108 ஆம்புலன்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மனித வளத்துறை அலுவலர்கள் ஜான் பெர்னான்டஸ், எப்சியூலா, வாகன பராமரிப்பு மேற்பார்வையாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நேர்காணலில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நடந்தது. தொடர்ந்து மருத்துவ உதவியாளர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் அடிப்படை செவிலியர் பணி உள்ளிட்ட தேர்வுகள் நடந்தது.

அதேபோல் டிரைவர் பணிக்கு எழுத்து தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல் கண்பார்வை தொடர்பான தேர்வுகள் நடந்தது. இதில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்