தொழில் அதிபர் வீட்டில் 107 பவுன் நகைகள் மாயம்

திருச்சியில் தொழில் அதிபர் வீட்டில் இரும்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்த 107 பவுன் நகைகள் மாயமாகின. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2023-01-21 12:45 GMT

திருச்சியில் தொழில் அதிபர் வீட்டில் இரும்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்த 107 பவுன் நகைகள் மாயமாகின. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

107 பவுன் நகைகள்

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 64). மின்சாதன பொருட்கள் மொத்த விற்பனை செய்து வருகிறாா். இவர் தனது வீட்டில் உள்ள இரும்பு பெட்டகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் 107 பவுன் நகைகளை வைத்து பூட்டி வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த இருநாட்களுக்கு முன் அந்த இரும்பு பெட்டகத்தை மேகநாதன் திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த 107 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனால் இரும்பு பெட்டகம் உடைக்கப்படவில்லை.

போலீசார் விசாரணை

இதுகுறித்து மேகநாதன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 107 பவுன் நகைகள் மாயமானது எப்படி? தெரிந்த நபர்கள் யாராவது சாவியை பயன்படுத்தி திருடினார்களா? அல்லது மர்ம நபர்கள் திருடினார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்