தமிழகத்தில் புதிதாக 107 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் புதிதாக இன்று 56 ஆண்கள், 51 பெண்கள் என 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,56,083 ஆக உயர்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 43 பேர், செங்கல்பட்டில் 13 பேர் உள்பட 19 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 19 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை.
80-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,17,222 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 12,921 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 836 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.