வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும் மயிலாடுதுறையில் நடந்த சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மயிலாடுதுறையில் வன்னியர் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாக்கம் சக்திவேல் தலைமை தாங்கினார். பா.ம.க. மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாவட்டத்தலைவர் சித்தமல்லி பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் முத்து வரவேற்றார். இதில் வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க.அய்யாசாமி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் அறிவுறுத்தியபடி வன்னியர்கள் அனைவரும் தமிழக முதல்-அமைச்சருக்கும், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கும் வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வலியுறுத்தி மனுக்கள் அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில நிர்வாகிகள் காசி.பாஸ்கரன், ஐயப்பன், காமராஜ், விமல், தேவி குருசெந்தில் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பா.ம.க. நகர செயலாளர் கமல்ராஜா நன்றி கூறினார்.