தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 105 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்துவருகிறது. இதன்படி தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 31 பேருக்கும்,கோவையில் 18 பேருக்கும், செங்கல்பட்டில் 11 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்தில் கடந்த சில நாட்களை போன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று 79 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது