ஒரே நாளில் 104 பேர் கொரோனாவால் பாதிப்பு
ஒரே நாளில் 104 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 104 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 21 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மொத்தம் 445 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை கடைபிடித்து, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.