கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 103 வாகன ஓட்டிகளுக்கு அபராதம்-அதிகாரிகள் நடவடிக்கை

கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 103 வாகன ஓட்டிகளுக்கு அபராதம்-அதிகாரிகள் நடவடிக்கை

Update: 2023-07-04 14:13 GMT

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருவதுடன், வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி போலீஸ் நிலைய ரோந்து வாகன சப் -இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீசார் குன்னூர் செல்லும் சாலையில் கிருஷ்ணாபுதூர், பாண்டியன் பூங்கா மற்றும் கட்டபெட்டு உள்ளிட்ட பகுதிகளில் வாகனத் தணிக்கை மேற்க்கொண்டனர். இதில் தலைகவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டியும், பின்னால் அமர்ந்தும் சென்றவர்கள், சீட் பெல்ட் அணியாமல் சென்றவர்கள், அதி வேகத்தில் வாகனத்தை இயக்கியவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள், ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் உரிய ஆவணங்கள் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாதவர்கள், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக வாகனங்களை நிறுத்தி சென்றவர்கள் என 103 பேர் மீது வழக்குப் பதிவு செய்ததுடன், அவர்களுக்கு மொத்தம் ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்