அரவைக்காக 1,000 டன் நெல்
மயிலாடுதுறையில் இருந்து மதுரைக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் நடைபெற்ற குறுவை சாகுபடியில் கொள்முதல் செய்யப்பட்ட 92 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் அரவை செய்து பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலமாக அரிசி வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்கு அனுப்பாமல் இருந்த 1,000 டன் நெல், அரவைக்காக நேற்று மதுரைக்கு சரக்கு ெரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை சித்தர்க்காட்டில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து லாரிகளில் நெல்மூட்டைகள் ஏற்றப்பட்டு, மயிலாடுதுறை ெரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதை தொடர்ந்து லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் ஏற்றினர். பின்னர் சரக்கு ரெயில் நெல் மூட்டைகளுடன் மதுரைக்கு புறப்பட்டு சென்றது.