அரவைக்காக 1000 டன் நெல்
பேரளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
நன்னிலம்:
பேரளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு 1,000 டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ெரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருவாரூர், குடவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் பேரளம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் ஏற்றினர். இதை தொடர்ந்து சரக்கு ரெயில் நெல் மூட்டைகளுடன் திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்றது.