மகளிருக்கு 1,000 முருங்கை செடிகள்
மகளிருக்கு 1,000 முருங்கை செடிகளை திட்ட இயக்குனர் வழங்கினார்.
கே.வி.குப்பத்தை அடுத்த நெட்டேரி, பி.என்.பாளையம் பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.ஆர்த்தி திடீர் ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சி மன்ற அலுவலகம், பள்ளிக் கட்டடிம் ஆகியவற்றை பார்வையிட்டார். நிகழ்ச்சில் மகளிர் குழுக்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் வளர்க்கும் தாய்மார்களுக்கு ஆயிரம் முருங்கைச் செடிகள் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் இ.கோபி, அதிகாரிகள் உடன் இருந்தனர்.