100 பெண்கள் வீணை வாசிக்கும் நிகழ்ச்சி
100 பெண்கள் வீணை வாசிக்கும் நிகழ்ச்சி சிவகாசியில் நடைபெற்றது.
சிவகாசி பத்திரகாளியம்மன் கோவிலில் நவராத்திரியையொட்டி நாத சங்கமம் என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு வயதுடைய 100 பெண்கள் கலந்து கொண்டு வீணை வாசித்தனர். விநாயகர் துதி பாடலுடன் இசை நிகழ்ச்சி தொடங்கியது.
வரிசையாக முருகன், சிவன், சரஸ்வதி உள்ளிட்ட கடவுள்கள் பாடல்களை வீணையில் வாசித்தனர். கடைசியில் அய்யப்பன் பாடலை பாடி முடிவு செய்தனர்.ஒரே இடத்தில் 100 பெண் கலைஞர்கள் வீணை வாசித்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.