100 அடையாளம் தெரியாத உடல்கள் அடக்கம்: கோவை பெண் போலீசுக்கு டி.ஜி.பி. பாராட்டு
100 அடையாளம் தெரியாத உடல்கள் அடக்கம்: கோவை பெண் போலீசுக்கு டி.ஜி.பி. பாராட்டு.
சென்னை,
கோவை மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் ஆமினா தனது போலீஸ்துறை பணியுடன் சமூக சேவை பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இவர், கடந்த 5 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத உடல்களை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் நல்லடக்கம் செய்துள்ளார்.
பெண் போலீஸ் ஆமினாவின் இந்த சமூக சேவை, போலீஸ்துறைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் அவரை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேரில் வரவழைத்து வெகுமதியுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.