நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 17 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

Update: 2023-05-08 18:45 GMT

நாமக்கல்:

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 17 அரசு பள்ளிகள் உள்பட 87 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன. 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் விவரம் வருமாறு:-

எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, செங்கரை ஏகலைவா மாதிரி பள்ளி, தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பாண்டமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லக்காபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரிச்சிப்பாளையம், பிலிக்கல்பாளையம், அத்தனூர், எலச்சிபாளையம், கபிலர்மலை, பொத்தனூர், பொம்மம்பட்டி மற்றும் வெப்படை அரசு மேல்நிலைப்பள்ளிகள், எதிர்மேடு சமூக நலத்துறைபள்ளி, பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் வல்வில் ஓரி ஜி.டி.ஆர். மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியான பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளி.

100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளை, கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்