100 சதவீத இழப்பீடு கிடைக்க ஆவன செய்ய வேண்டும்

பயிர் காப்பீடு திட்டத்தில் 100 சதவீத இழப்பீடு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு, பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்

Update: 2022-11-17 18:45 GMT

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே கீழையூர் கிராமத்தில் மழைநீர் சூழ்ந்த விளைநிலங்களை நேற்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி. ஆர்.பாண்டியன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்பு அதிகமாக உள்ளது. கனமழையால் சம்பா நடவு செய்த வயல்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதில் 90 நாட்களான பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு, மத்திய அரசிடம் தெரிவித்து மயிலாடுதுறையை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும், விவசாயிகளின் நலன் கருதி பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு 100 சதவீதம் கிடைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். பேரிடர் மேலாண்மை திட்டத்தில் கடந்த 2020-21-ம் ஆண்டு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இடுபொருள் இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது. அதனை தமிழக அரசு குறைத்துள்ளது. உடனடியாக மறுபரிசீலனை செய்து இடுபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்