100 பேர் கண்தானம் செய்ய பதிவு

தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் 100 பேர் கண்தானம் செய்ய பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-06-30 18:52 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் உள்ள அல்ட்ராமரைன் அண்டு பிக்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் 100 பேர் தங்கள் கண்களை தானம் செய்வதற்கான பதிவு செய்யும் நிகழ்ச்சி தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, நிறுவனத்தின் இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அரசு கண் மருத்துவமனை மருத்துவர் சிவசங்கரி மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர் கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் வளர்மதி பங்கேற்று பேசினார்.

இன்றைய காலத்தில் குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகளவில் உள்ளதன் காரணமாக அவர்களுக்கு எளிதில் பார்வை குறைபாடு ஏற்படும் என தகவல்களின் வழியாக அறிகிறோம். எனவே, பெற்றோர்கள் குழந்தைகளை செல்போன்களை அதிகம் பயன்படுத்தாமல் தடுக்க வேண்டும்.

கண்தானம் என்பது சிறப்புமிக்க செயல். இதன் மூலம் பலர் உலகத்தின் வெளிச்சத்தை காண முடியும். கண்தானம் செய்பவர்கள் அதன் விவரத்தை உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் இக்கட்டான சூழ்நிலையில் கண்களை தானம் செய்ய யாரை தொடர்புக்கொள்ள வேண்டுமென அவர்களுக்கு தெரியும் என கூறினார்.

தொடர்ந்து, கண் தானம் செய்தவர்களுக்கு, கண் கொடையாளர்களுக்கான அட்டையும், மரம் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மரக்கன்றுகளையும் வழங்கினார். இதில், நிறுவனத்தின் மேலாளர் லட்சுமிநாராயணன், வேதியியல் நிபுணர் கிரிஜா, ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன் உள்பட பலரும் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்