இந்தியாவில் ரூ.5,500 கோடியில் 100 புதிய ஷோரூம்கள் - ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் தகவல்

‘இந்தியாவில் ரூ.5 ஆயிரத்து 500 கோடியில் 100 புதிய ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளது' என ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Update: 2023-04-27 00:25 GMT

தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றாக ஜோஸ் ஆலுக்காஸ் இருந்து வருகிறது. கேரள மாநிலம் திருச்சூரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் விற்பனையகங்களை திறந்து முன்னோடி நிறுவனமாக இருக்கிறது.

இந்தியாவில் விற்கப்படும் தங்க நகைகளில் பி.ஐ.எஸ். 916 தர முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தபோது, இந்த நிறுவனத்தின் தலைவர் ஜோஸ் ஆலுக்கா அதற்கான பிரசாரம் மேற்கொண்டார். தற்போது தங்க நகைகளுக்கான எச்.யு.ஐ.டி. என்ற சான்றிதழையும் அவர் பெருமையுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்.

ஜோஸ் ஆலுக்காஸ் நகைகள், அதன் எடைக்கு சமமான உண்மையான மதிப்பைக் கொண்டவை என மக்கள் தைரியமாக நம்புவதால்தான், தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்வதாக ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் குளோபல் அம்பாசிடராக நடிகர் மாதவனை நியமித்து இருக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் 100 புதிய ஷோரூம்களை திறக்க இருப்பதாக ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோஸ் ஆலுக்கா நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் ரூ.5 ஆயிரத்து 500 கோடியில் 100 புதிய ஷோரூம்களை திறக்க இருக்கிறோம். இந்தியாவில் சில்லரை தங்க நகை விற்பனைத்துறையில் உள்ள ஒரு நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடு மற்றும் விரிவாக்க திட்டம் ஆகும்.

2024-ம் ஆண்டில் திறமை, புதுமை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பணப்பலன்கள் ஆகியவற்றின் மூலம் 60 ஆண்டுகாலமாக வெற்றியை ருசித்து வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம், ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி நகை வடிவமைப்பாளர்களில் ஒருவருடன் கூட்டு சேர்ந்து புதிய வடிவிலான நகைகள் வெகுவிரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது, ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் வர்கீஸ் ஆலுக்கா, பால் ஜெ.ஆலுக்கா மற்றும் ஜான் ஆலுக்கா, விளம்பர தூதர் நடிகர் மாதவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

"நடிகர் மாதவனுடன், நடிகை கீர்த்தி சுரேசும் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்துக்காக எதிர்காலத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்'' என்று ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் வர்கீஸ் ஆலுக்கா, பால் ஜெ.ஆலுக்கா, ஜான் ஆலுக்கா ஆகியோர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்