ரூ.100 கோடியில் வளர்ச்சி பணிகள்

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.100 கோடி மதிப்பில் வளர்ச்சி பணி மேற்கொள்ள முடிவு எடுத்து அதிகாரிகள் அதற்கான திட்டங்களை தீவிரமாக தேர்வு செய்து வருகிறார்கள்.

Update: 2023-05-25 20:19 GMT

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.100 கோடி மதிப்பில் வளர்ச்சி பணி மேற்கொள்ள முடிவு எடுத்து அதிகாரிகள் அதற்கான திட்டங்களை தீவிரமாக தேர்வு செய்து வருகிறார்கள்.

சிவகாசி மாநகராட்சி

சிவகாசி மாநகராட்சி உருவாக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் புதிதாக பொறுப்பு ஏற்ற கமிஷனர் சங்கரன் வளர்ச்சி பணிகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்.. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் அதற்கான கோரிக்கைகளை பெற்று அரசுக்கு அனுப்பி வைத்து வருகிறார். இதன் பயனாக தற்போது மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் ரூ.100 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக அரசின் நிதி அமைச்சராக தங்கம்தென்னரசு பொறுப்பு ஏற்று உள்ளதால் அதற்கான வாய்ப்பு 100 சதவீதம் உள்ளதாக அதிகாரி தெரிவித்து வருகிறார்கள்.

பணிகள் தேர்வு

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் என்னென்ன வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து கமிஷனர் சங்கரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தேர்வு செய்து வருகிறார்கள். மாநகராட்சி கூட்டத்தில் பேசும் கவுன்சிலரின் கோரிக்கைகள் மற்றும் அமைப்புகள் கூறும் கருத்துக்களை கேட்டு அதற்கு தேவையான பணிகளை அதிகாரிகள் குழுக்கள் செய்து வருகிறது.

குறிப்பாக சிவகாசி அருகே உள்ள நாரணாபுரத்தில் இருந்து சிவகாசி பஸ்நிலையம் வரை கழிவுநீர் கால்வாய், பெரிய குளம் கண்மாய் பகுதியில் நடைபயிற்சி மேடை, சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் 48 வார்டுகளிலும் போதிய வாருகால் வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவை செய்து கொடுக்க அதிகாரிகள் முன் வந்துள்ளனர். இதற்கான பணி விவரங்களை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.

ரூ.100 கோடியில் வளர்ச்சி பணி

முதல் கட்டமாக தற்போது ரூ.20 கோடி வரை ஒதுக்க உள்ள அரசு அந்த பணிகள் தொடங்கிய பின்னர் அடுத்த கட்டமாக ரூ.60 கோடி ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 2 ஆண்டுகளில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் ரூ.100 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் செய்ய அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்