பெண்களை அரிவாளால் வெட்டியவருக்கு 10 ஆண்டு சிறை

பெண்களை அரிவாளால் வெட்டியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-10-18 19:32 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் சூலக்கரை அருகே உள்ள பசும்பொன்புரத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 39). அதை ஊரை சேர்ந்தவர் மாயக்கண்ணன். இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 21.6.2018-ந் தேதி அன்று மணிமாறன் அரிவாளால் மாயக்கண்ணனின் மனைவி காளீஸ்வரி மற்றும் அவரது தாய் தனலட்சுமி ஆகிய 2 பேரையும் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள் 2 பெண்களை வெட்டிய மணிமாறனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 4,500-ம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்