தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
சிவகாசியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 58). கூலி தொழிலாளி. இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து லோகநாதனுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 7 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்தார்.