சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 39). இவர் கடந்த 27-10-2020 அன்று 8 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. லோகநாதனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை ரூ.14 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.
----