அமிர்தி, ஸ்ரீபுரத்துக்கு 10 சிறப்பு பஸ்கள் இயக்கம்

காணும் பொங்கலையொட்டி அமிர்தி, ஸ்ரீபுரத்துக்கு 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

Update: 2023-01-17 15:01 GMT

வேலூர்

காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதுபோக்குவார்கள். அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் இன்று குவிந்தனர்.

அமிர்தி சிறுவன உயிரின பூங்காவுக்கு ஏராளமானவர்கள் படையெடுத்தனர்.

அதேவேளையில் வேலூர் அருகே உள்ள ஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்கும் ஏராளமானவர்கள் சென்றனர். இதையொட்டி மக்களின் வசதிக்காக அமிர்திக்கு 5 சிறப்பு பஸ்களும், ஸ்ரீபுரத்துக்கு 5 சிறப்பு பஸ்களும் வேலூரில் இருந்து இயக்கப்பட்டன.

மேற்கண்ட பகுதிகளுக்கு ஏற்கனவே வழக்கமாக செல்லும் டவுன் பஸ்களில் (பிங்க் நிற பஸ்) பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

ஆனால் அமிர்தி, ஸ்ரீபுரத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் பெண்களிடம் டிக்கெட்டுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

சில பெண் பயணிகள் இதுகுறித்து கண்டக்டரிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுக்கு கண்டக்டர்கள் விளக்கம் அளித்தனர்.

பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு பஸ்களையே பயன்படுத்தினர்.

இதனால் வேலூர் பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது.

அதிக பயணிகளால் வேலூர் புதிய பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்