மது விற்ற 10 பேர் கைது

மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-08 18:32 GMT

குளித்தலை சுங்ககேட், பெரியபாலம், குளித்தலை அருகே உள்ள வை.புதூர், புதுப்பாளையம், பரளி, மையிலாடி, நடைபாலம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பகுதிகளுக்கு சென்ற போலீசார் அப்பகுதிகளில் மது விற்ற கரிகாலன் (வயது 53), இளங்கோவன் (49), வீரமலை (58), சிவானந்தம் (54), வெற்றிவேல் (46), சுப்பிரமணி (53), திருநாவுக்கரசு (34), மனோகரன் (54), சண்முகம் (46) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 57 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதேபோல் வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புன்னம்சத்திரம் அருகே பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதே பகுதியை சேர்ந்த கோபி (43) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்